நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரை கைது செய்ய அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகாவை கைது செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சரத்குமார், அவர் மனைவியும் நடிகையுமான ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து சில படங்களைத் தயாரித்துள்ளனர்.

அந்த சமயத்தில் அவர்கள் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த செக் ஒன்று பவுன்ஸ் ஆகியுள்ளது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

அந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்த போது சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதனால் நிதிபதி அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். பெயிலில் வரும் கைது உத்தரவாகவே அது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை 12ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்