வெளிநாட்டில் வாய்ப்பு கிடைத்தும் தவித்த தமிழ் பெண்... நடிகர் விஜய் சேதுபதி செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை திறமை இருந்தும், வெளிநாட்டிற்கு செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்து வந்ததால், நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் தாமோரதரன். இவருக்கு உதய கீர்த்திகா என்ற மகள் உள்ளார்.

அவர் தமிழ் வழியில் பள்ளிக் கல்வி பயின்று உக்ரைன் நாட்டில் விண்வெளி பொறியியல் படித்து முடித்துள்ளார்

தற்போது போலந்து நாட்டில் உள்ள அனலாக் அஸ்ட்ரானட் என்ற பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் அதற்கு 8 லட்சம் ரூபாய் செலவு ஆகும் எனவும் பெயிண்டரான என்னிடம் ஏது அவ்வளவு பணம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, வீராங்கனை மற்றும் குடும்பசூழ்நிலையை உணர்ந்து அவருக்கு 8 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதற்கான காசோலையை, விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து மாணவி உதய கீர்த்திகாவிடம் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட விஜய் சேதுபதி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...