ICU-வில் இருந்த போது கிரேசி மோகன் சொன்ன வார்த்தை இது தான்…

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான கிரேசி மோகன் நேற்று திடீரென்று நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் நண்பரும் நடிகருமான எஸ்.வி.சேகர் சில தகவல்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றிய நடிகர் கிரேஸி மோகன் உயிரிழந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது.

திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிரேசி மோகன் ஐசியூ-வில் இருந்த போது அவர் தம்பி மாதுவிடம், யார் யார் வந்தாங்களோ, நேரம் முடிஞ்சா போயித்தான் ஆகணும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் கூறியது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அவருக்கு தெரியவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மேலும் கிரேஸி மோகன் கூட்டுக் குடும்பம் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்தவர். இதன் காரணமாகவே அவர் கூட்டுக் குடும்பமாகத்தான் தன் குடும்பத்தை வழி நடத்தினார்.

அதுமட்டுமின்றி அவர் எஸ்.வி.சேகரிடம் டக்னு ஒரு ஹார்ட் அட்டாக், உடனே போயிட வேண்டும் என்று சொல்வாராம். அவர் சொன்ன படியே இன்று நடந்துள்ளது. இதனால் அவரது ஆசைபடி தான் மரணம் கூட நடந்துள்ளது என எஸ்.வி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers