இது மிகவும் முட்டாள்தனமானது! கொந்தளித்த நடிகை காயத்ரி ரகுராம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மோடி பதவியேற்கும் நேரத்தில் வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என, காயத்ரி ரகுராம் கோபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சியை வைத்து #Pray_for_neasamani என்ற ஹேஷ்டாக், கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் உலகளவில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் பலர் இதற்கு ஆதரவாக ட்வீட் செய்து வரும் நிலையில், மறுபுறம் மோடி பிரதமராக பதவியேற்கும் நாளில் அவரது எதிர்ப்பாளர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருவதாக, மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் #Pray_for_neasamani ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம். அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற விடயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று.

தேவையில்லாத ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என தெரிவித்தார். ஆனால், சிலர் மோடியை ட்ரெண்ட் செய்யாததால் கோபம் வருகிறதா? என்பது போல் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், ‘மோடி ஜி-க்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது. இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள்.

முக்கால்வாசி ஆட்கள் இந்த நகைச்சுவையையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்