அம்மா உங்களுக்கு கொடூரமான தண்டனையை கொடுத்து விட்டேன்.. 'என்னை பெற்றதுதான் நீங்கள் செய்த தவறு'..கதறிய பிரபல நடிகை

Report Print Abisha in பொழுதுபோக்கு

அன்னையர் தினத்தையொட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பலரை அலற வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரது பாலியல் குற்றச்சாட்டுகள், பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பீதியடைய வைத்தது.

இந்நிலையில் தற்போது அவர் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது தாய்க்கு மிகக் கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, "அம்மாவை தவிர நம்மை வேறு யாரால் பார்த்துக்கொள்ள முடியும். ஐ லவ் யூ அம்மா. நீங்களும் என்னை இன்னும் நேசிக்கிறீர்கள். என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடை பிறப்பை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்னை பெற்றது தான் நீங்கள் செய்த தவறு. அதற்காக மிகக்கொடூரமான தண்டனையை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன். என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்