ஆஸ்கர் விருது: பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த கமலி என்ற சிறுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி காலணிகள் கூட அணியாமல் ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், சர்வதேச அளவில் பிரபலமான ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டதையடுத்து, அவர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால், இந்த புகைப்படம் உலக அளவில் பிரபலமானது. இந்த புகைப்படத்தை பார்த்த நியூசிலாந்தை சேர்ந்த ‌ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர், தமிழகத்திற்கு வந்து கமலியை தொடர்பு கொண்டு கமலி என்கிற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.

கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கமலி என்ற குறும்படம் டந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது மற்றும் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என கமலியின் தாய் சுகந்தி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers