இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: நடிகை கங்கனா ரணாவத் கருத்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு
328Shares

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர், இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 64 சதவித வாக்குகள் பதிவான இந்த தேர்தலில், நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சன் என தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதேபோல் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே ஆகியோரும் வாக்களித்தனர்.

இவர்களைப் போல் நடிகை கங்கனா ரணாவத்தும் வாக்களித்தார். அதன் பின்னர் அவர், இப்போது தான் இத்தாலிய அரசிடம் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘இத்தனை நாட்களாக நம் நாடு முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது.

இப்போது தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருப்பதை நான் உணர்கிறேன். எனவே உங்கள் சுதந்திரத்தை காக்க வாக்களியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்