இலங்கையில் நடந்த காட்டுமிரண்டித்தனமான குண்டுவெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது! நடிகை காஜல் அகர்வால் உருக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 310 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது.

உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக் கூட என்னால் யூகிக்க இயலவில்லை. இறைவன் நம்முடன் இருப்பாராக.

சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது. மறைந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers