ராதா என்பது எனது அப்பாவின் பெயர்: விஷாலுக்கு பதிலடி கொடுத்த ராதாரவி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நயன்தாரா குறித்து மோசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் , தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்களுடன் நயன்தாராவை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

'ராதா' என்ற பெண் பெயரை தனது பெயருக்கு முன்னாள் வைத்து கொண்டு ராதாரவி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது பொருத்தமில்லாதது. எனவே அவர் தனது பெயருக்கு முன் உள்ள ராதாவை நீக்கிவிடலாம் என்று விஷால் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ராதாரவி, என்னுடைய அப்பாவின் பெயரைத்தான் நான் என் பெயருக்கு முன்னாள் வைத்துள்ளேன்.

விஷாலுக்கு ஆர்கே நகரில் போட்டியிடவே தெரியாதபோது இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.

நடிகர் ராதாரவின் தந்தை எம்.ஆர்.ராதா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்