உங்களுக்கு ரவி மட்டும் போதும்.. ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? நடிகர் விஷால் விளாசல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் ராதாரவியின் பெயரில் உள்ள ரவி மட்டும் போதும்; ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? என நடிகர் விஷால் விளாசியுள்ளார்.

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று பாடகி சின்மயியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அதன் பின்னர் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று விஷாலின் ட்விட்டர் கணக்கை மேற்கொளிட்டு பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், விஷால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில், உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடித்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு, அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers