ஆசிட் வீசப்பட்ட பெண்ணான தீபிகா படுகோன்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோன் நடிக்கும் ‘Chhapaak' படத்தின் First Look Poster வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணிடம் குட்டா என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் லட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆத்திரமடைந்த குட்டா, தனது நண்பருடன் சேர்ந்து லட்சுமியின் முகத்தில் ஆசிட் வீசினார்.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால், தற்போது தன்னைப் போல் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்காக குரல் கொடுத்து வருவதுடன், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மேலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சான்வ் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் லட்சுமி உள்ளார். இந்நிலையில், இவரது வாழ்க்கை கதை ‘Chhapaak' எனும் பெயரில் திரைப்படமாகிறது.

இதில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோன், லட்சுமி அகர்வாலாக நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்த படத்தின் First Look Poster இன்று வெளியாகியுள்ளது. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு தீபிகா மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த Poster வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்