ஓரமா போய் நில்லுங்க..அம்பானி மகன் திருமணத்தில் அசிங்கப்பட்டாரா நடிகர் ஷாருக்கான்? வெளியான வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான ஷாருக்கானை ஓரமாக போய் நில்லும் படி ஆகாஷ் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ஜியோ நிறுவனத்தின் உரிமையாளருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி.

இவரின் மூத்த மகனான ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும், சமீபத்தில் மும்பையில் கோலகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், வெளிநாட்டில் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொண்டார்.

திருமண விழாவில் அனைவரும் நடனமாடிக்கொண்டிருத போது, ஷாருக்கான் நடனமாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஆகாஷ், தன் அம்மாவுடன் நடனமாட வேண்டும் என்பதற்காக அவரை

அங்கிட்டு ஓரம் செல்லும் படி கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, இணையவாசிகள் பலரும் இந்த அசிங்கம் தேவையா என்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்