பொள்ளாச்சி பெண்களுக்காக கடும் கோபத்துடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ! அதன் பின் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்ட அறந்தாங்கி நிஷா! நீ ஆபாசமா பேசுறதை நிறுத்து என்று பேசிய இணைவாசி

தமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஆவேசமாக வீடியோ வெளியிட்ட நிஷா, அதன் பின் வந்த கமெண்ட்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பொள்ளாசியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்களின் செயல் தமிழகத்தையே உலுக்கியதால், அது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் காமெடி நடிகையாக அவதாரம் எடுத்திருக்கும், அறந்தாங்கி நிஷா, இந்த சம்பவம் தொடர்பாக ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மாவை வெளுத்து வாங்கினார். இந்த சட்டம் கடுமையாக இல்லாததன் காரணமாகவே பெண்கள் வெளியில் சொல்வதற்கு பயப்படுகின்றனர்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நிர்மலா தேவிக்கு இப்போ ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு யார் பொறுப்பு, அந்த சம்பவம் குறித்து நாம் கொந்தளித்த போது, முதலில் நிர்மலாவை உள்ளே தூக்கி போட்டார்கள்.

இப்போது அதை மறந்தவுடன் நிர்மலாவுக்கு ஜாமீன் கொடுத்துவிட்டனர். கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே, இதற்கு முடிவு காண முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் வீடியோ போட்டதுக்கே என்னுடைய கமெண்டில் ஒருத்தர், நீங்க முதல்ல விஜய் டிவியில் ஆபாசமாக பேசுவதை குறையுங்கள் என்று கூறுகிறார்.

நான் வெளியில் ஒரு விஷயம் சொன்னாகூட நம்ம பண்ற தொழிலுக்குள்ள போய் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள்.

அப்போ ஆண்களுடைய மனநிலை எப்படியிருக்கு பாருங்கள், நாம பேசுற விஷயம் என்னன்னு பார்க்காமல் நம்மகிட்ட என்ன குறை சொல்லலாம்னு தேடுறாங்க. பெண்கள் சாதிக்கக் கூடாது, பெண்கள் வாழவே கூடாது என்று நினைக்கிறீங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்