பொள்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டி வேண்டாம் என்று கூறிய விஷால்! நடிகை குட்டி பத்மினி நெகிழ்ச்சி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் விஷால் பொள்ளாச்சி சம்பவத்தால், தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்ட்டி வேண்டாம் என்று கூறியதாக நடிகை குட்டி பத்மினி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் நகரில் நடிகர் விஷால்-அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நடிகை குட்டி பத்மினி கலந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில், விஷால்-அனிஷா ரெட்டி குறித்து அவர் கூறுகையில், ‘விஷால் அம்மாவும், நானும் ரொம்ப நெருங்கிய தோழிகள். அதனால் விஷாலும் என் பிள்ளை மாதிரிதான்.

விஷால் என்னை அனிஷாகிட்டே, இவங்களும் என் அம்மா-ன்னு அறிமுகம் செய்ததும், உடனே அந்த பொண்ணு என் காலைத் தொட்டு கும்பிட்டுட்டாங்க. விஷாலும் என்கிட்டே ஆசீர்வாதம் வாங்கினார். இவ்வளவு பெரிய ஸ்டேட்டஸில் இருக்கிறவங்க எளிமையாக இருக்காங்களேன்னு எனக்கு மனசு ரொம்ப நெகிழ்ந்துபோச்சு.

விஷாலைப் பற்றி இன்னொரு முக்கியமான விடயத்தை நான் சொல்லியே ஆகணும். நிச்சயதார்த்தம் நடந்த அன்றைக்கு evening ஒரு பார்ட்டிக்கு arrange பண்ணியிருந்தார்.

ஆனால், அந்த நேரத்தில் பொள்ளாச்சி சம்பவம் நடந்துட்டதால், எல்லாப் பக்கமும் ஒரே துக்கமா இருக்கிற நேரத்தில் இந்த மாதிரி enjoyment எல்லாம் வேண்டாம்-னு அந்த பார்ட்டியை ரத்து பண்ணிட்டார். ஒரு அம்மாவா விஷாலைப் பற்றி நான் ரொம்ப பெருமைப்படறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்