உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்துவிட்டேன்.. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ்பட நடிகை உருக்கம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, வாழ்க்கையில் இனி பயமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த இவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு சென்ற சோனாலி, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமாகியுள்ளார். புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ள அவர் தனது அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது.

எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் அறுவை சிகிச்சை செய்த வடுக்கள் உள்ளன.

நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்திருக்க மாட்டேன். கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன்.

எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்துவிட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும், எனது புருவங்கள் மறுபடியும் வந்துவிட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...