இளையராஜா கோபப்பட்டது குறித்து நடிகை ரோகிணியின் பதிவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இளையராஜா என்னிடம் கோபப்பட்டதை நான் பெரிதாகக் கருதவில்லை என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

அப்போது இயக்குநர் ஷங்கரிடம், நீங்களும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றுவதை பார்க்க பலருக்கும் ஆவல் இருந்திருக்கும் என ரோகிணி கூறும்போதே இளையராஜா குறுக்கிட்டார்.

அவர், ‘இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா.. நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு?’ என்று கூறினார். இளையராஜா இவ்வாறு நடந்து கொண்டதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் இதற்கு கண்டனமும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை ரோகிணி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறுகையில், ‘இளையராஜா என்னிடம் கோபப்பட்டதைப் பற்றி ஆதங்கப்படும் அனைவருக்கும்.. நான் அதைப் பெரிதாகக் கருதவில்லை. விட்டுவிடலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்