படம் வெளியாக இருந்த நிலையில் பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் லுக் பெர்ரி(52) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.

ஹாலிவுட்டில் 8 செகண்ட்ஸ், அமெரிக்கன் ஸ்ட்ரேஸ், தி ஹீஸ்ட், ஸ்டோம், பைனல் ஸ்டோம், ரெட் விங் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் லுக் பெர்ரி.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த இவர், கடந்த மாதம் 27ஆம் திகதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

அதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த பெர்ரி, நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கடந்த 1993ஆம் ஆண்டு ராச்சல் மின்னி என்பவரை திருமணம் செய்த பெர்ரி, பின் 2003ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

லியானார்டோ டிகாப்பிரியோ, பிராட் பிட் ஆகியோருடன் இணைந்து லுக் பெர்ரி நடித்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ என்ற திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருந்த நிலையில், அவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்