எனது மனைவி நித்யா வாய் அழுகிப்போய்விடும்....அவருடன் சேர்ந்து தவறு செய்கிறார்: தாடி பாலாஜி ஆவேசம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

எனது மனைவி நித்யாவும், காவல்துறை ஆய்வாளர் மனோஜ் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து தொடந்து தவறுகள் செய்துகொண்டே இருந்தால் மிக தீவிரமாக நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

அரசியலில் இருப்பதற்கு எனது மனைவி நித்யாவுக்கு தகுதி இல்லை, முதலில் அவர் ஒழுங்காக இருக்க வேண்டும். அதன்பின்னர் அரசியலுக்கு வரவேண்டும்.

பாலாஜியின் மனைவி நித்யா என்றுதான் இதுவரை கூறிவருகிறார்கள். எனது பெயரை வைத்துதான் அவருக்கு மரியாதை கிடைக்கிறது.

டிக் டாக், பேஸ்புக் மூலம் பெண்கள் அதிகம் கெட்டுப்போகிறார்கள். இன்னொருத்தருடைய மனைவியை பார்ப்பதற்கு அந்த மனோஜ் குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் எனது கண்ணாடியை போட்டு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ஒரு கண்ணாடி கூட வாங்குவதற்கு வழியில்லை அவருக்கு, எனது மனைவி இவ்வாறு தவறுகளை தொடர்ந்து செய்தால் போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்