எனக்கு பலமுறை இறந்தநாள் வந்திருக்கு! பிரபல நடிகை கே.ஆர் விஜயா ஆதங்கப்பட காரணம் என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தனக்கு பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் பலமுறை வந்துள்ளது என பிரபல நடிகை கே.ஆர் விஜயா கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் கே.ஆர் விஜயா.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கே.ஆர் விஜயா அளித்துள்ள பேட்டியில், விக்கிப்பீடியா உட்படப் பல தளங்களில் என் பிறந்த நாள் திகதி மாறுபட்டுள்ளது.

சிவராத்திரி நாளான இன்று தான் என் பிறந்த நாள்.

இதனால் எனக்கு வருடத்தில் ஒருநாள் மட்டும் பிறந்தநாள் வருவதில்லை. நான் இறந்துவிட்டதாக முதலில் தவறான செய்தி வந்தப்போது வருத்தப்பட்டேன். பிறகு, அதே செய்தி பலமுறை வந்ததால் பழகிவிட்டது.

எனக்கு பிறந்த நாளும் சரி, இறந்த நாளும் சரி பல முறை வந்திருக்கிறது.

இதுவும் ரசிகர்களின் ஒருவிதமான அன்பின் வெளிப்பாடு என நினைத்து கொள்வதால் இது போன்ற செய்திகளை தவறான செய்திகளாக நான் எடுத்துகொள்வதில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்