இப்படிலாம் ஏன் கேக்குற? மேடையில் நடிகையிடம் டென்ஷனான இளையராஜா: விமர்சனத்தை கிளப்பிய வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இசை நிகழ்ச்சி மேடையிலேயே நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நேற்று ஒளிப்பரப்பானது.

இதில் மேடையில் இளையராஜா, இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோர் நின்றிருந்தனர்.

அப்போது நடிகை ரோகிணி, இயக்குநர் ஷங்கரிடம், நீங்களும், ராஜா சாரும் இந்த மேடையில் இருக்கீங்க. உங்க ரெண்டு பேரோட காம்பினேஷனையும் பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆவல் இருந்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட இளையராஜா, இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுமா,

நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு? என்று டென்ஷனானார்

அதற்கு இல்லை என மறுத்தார் ரோகிணி.

அதற்கு ஐ டோன்ட் லைக் திஸ். இப்ப ஏன் அந்த மேட்டர எடுக்குற நீ? அவருக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்குற ஆட்களை வச்சுக்கிட்டு அவரு வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு என இளையராஜா கூறினார்

இளையராஜா இப்படி கடுமையாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்