என் பெயரை கெடுக்கிறார்.. 50 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு வேண்டும்! முன்னாள் மனைவி மீது பிரபல ஹாலிவுட் நடிகர் வழக்கு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய முன்னாள் மனைவியிடம், 50 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கேட்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். 55 வயதான ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்(32)-யை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து, ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் புகார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கடந்த ஆண்டு பேட்டியும் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் 50 மில்லியன் டொலர்கள் (ரூ. 355 கோடி) ஆம்பர் ஹெர்ட் நஷ்டஈடு வழங்க வேண்டும் ஜானி டெப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவதூறு வழக்கு குறித்து ஜானி டெப்பின் வழக்கறிஞர் கூறுகையில், ‘ஜானி டெப், ஆம்பர் ஹெர்டை துன்புறுத்தியதே இல்லை. டெப் மீது ஹெர்ட் கடந்த 2016ஆம் ஆண்டு கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஹெர்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் ஏற்படவும், அவரின் கெரியர் பிக்கப் ஆகவும் டெப் மீது இப்படி ஒரு புகாரை தெரிவித்தார்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆம்பர் ஹெர்டை அமைதியாக இருக்கச் செய்யவே டெப் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். ஹெர்ட் அமைதி காக்க மாட்டார் என்றும், டெப்பால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது அவரின் செயலில் இருந்து தெரிகிறது என்று ஹெர்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடன் பிரச்சனையில் இருக்கும் ஜானி டெப் இந்த வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்