திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளாரா பிரபல தமிழ்ப்பட நடிகை? அவரே அளித்த விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

திருமணம் ஆகாமலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் ராய் லட்சுமி.

இவர் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த ராய் லட்சுமி கோபம் அடைந்துள்ளார். தன்னை பற்றி வதந்தி பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என்கிறார் அவர்.

ராய் லட்சுமி கூறுகையில், என் வாழ்வில் பல காதல் வந்து போயுள்ளது. ஆனால் அதற்காக இஷ்டப்படி எல்லாம் என்னை பற்றி பேசக் கூடாது. நான் மாங்காய் சாப்பிட்டதை பார்த்து தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளனர்.

இது போன்ற வதந்தியை பரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers