மன்னிப்பு கேட்கவும் தயார்: பாடகர் கார்த்திக் உருக்கம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

மீ டூ இயக்கத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறியுள்ள பிரபல பாடகர் கார்த்திக், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் அதற்காக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாடகர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக உருக்கமான நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், என்னைச் சுற்றி எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய விரும்புகிறேன். என்னைச் சுற்றிய உலகம் எப்போதுமே மகிழ்ச்சியை பரப்புவதாக இருக்க வேண்டும் என விரும்புகிறவன் நான்.

என்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதன் காரணமாகவே, இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

சமீபகாலமாக டுவிட்டரில் என்னைப் பற்றி அநாமதேயப் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் எனது மனசாட்சிக்கு உண்மையாகவே இருக்கிறேன்.

நான் இதுவரை எந்த ஒரு நபரையும் மனம் நோகும்படி செய்ததில்லை. யாரையும் அவர்களது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை.

நான் வேண்டுமென்றே யாரையும் அசவுகரியமாக உணரவோ அல்லது பாதுகாப்பற்று உணரவோ செய்ததில்லை.

கடந்த காலங்களில் எனது செய்கையால் யாராவது வருந்தியிருந்தால் தயை கூர்ந்து அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன்.

எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன். மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்புக் கேட்கவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்.

யாருடைய வாழ்க்கையிலும் என்னால் கசப்பு உணர்வு இருக்கக் கூடாது என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers