என் மனைவிக்கு அந்த ஆணுடன் தொடர்பு....அவருடன் ஊர் சுற்றுகிறாள்: மீண்டும் தாடி பாலாஜி புகார்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறியவாறு மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பாலாஜி - நித்யா தம்பதியினரின் குடும்ப பிரச்சனை.

நித்தியா, தன்னை தாடி பாலாஜி அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், சந்தேகப்படுவதாகவும் கூறி விவாகரத்து கோரியிருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்ட போது, பாலாஜிக்கு 100 நாட்கள் வாய்ப்பு தருகிறேன், அவர் திருந்தி வாழ்ந்தால் மீண்டும் சேர்ந்து வாழத்தயார் என நடிகரும் அந்நிகழ்ச்சி தொகுப்பாளருமான கமல் முன்னிலையில் நித்யா தெரிவித்தார்.

ஆனால், தற்போது சேர்ந்து வாழ்வதை விட்டு மீண்டும் இவருக்குமான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நித்தியா இதுகுறித்து தெரிவித்துள்ளது, பாலாஜி அனைவர் முன்னிலையிலும் தன்னை நல்லவர் போல காட்டிக்கொள்ள நடிக்கிறார். என்னை பல ஆண்களுடன் இணைத்து பேசுகிறார். ஒரு பெண் எப்படி இத்தனை ஆண்களுடன் தொடர்பில் இருக்க முடியும், கமல் சார் சொன்னதற்காக இவர் கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சேன்.

இப்ப அதுவும் முடியலை. மொத்தமா பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்துதான் பொலிசில் மீண்டும் புகார் கொடுத்துள்ளேன். எனது மகள் ஒரு தந்தையின் அன்பு இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என நினைத்து பொறுமையாக இருந்தேன். ஆனால் அவளும் அவளது அப்பா வேண்டாமென்று கூறிவிட்டாள், இதனால் பாலாஜியை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

பாலாஜி கூறியதாவது, நித்யா சொல்வது அனைத்தும் பொய், நானும் நித்யாவும் ஒன்றாக இருந்தபோது, அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறி ஜிம் டிரெயினரைப் பார்க்க என்னிடம் பணத்தை வாங்கிட்டு குழந்தையுடன் புறபட்டு செல்வார்.

பொலிஸ் மனோஜ் என்பவர் அந்த ஜிம் ட்ரெயினர் போனை ரெக்கவரி பண்ணார். அதில் நிறைய படங்கள் ஜிம் டிரெயினரும் நித்யாவும் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் இருந்திருக்கின்றன.

அதன் பிறகுதான் மனோஜ், நித்யாவுக்கு உதவியாக இருந்து வருகிறார். நித்யா பிக் பாஸிலிருந்து 28 நாள்கள் கழித்து வெளியில் வந்த பிறகு, மனோஜ் என்கிற பொலிசுடன் வெளியில் அதிகம் சுற்றியிருக்கிறார்.

நித்யா நல்லவர் போல முகத்தை காட்ட நினைக்கிறார், எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார் என பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்