கல்யாணத்துக்கு பல வருசமா எனக்கு பொண்ணு கிடைக்கல.. ஏங்கிய நாட்கள்... மனம் திறந்த நடிகர் கஞ்சா கருப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் கஞ்சா கருப்பு திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்த நாட்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் மக்களிடம் பிரபலமானார்.

கஞ்சா கருப்புக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

சங்கீதா மருத்துவர் ஆவார், அவர் தனக்கு மனைவியாக வந்த தருணம் குறித்து கஞ்சா கருப்புவே கூறுகிறார்.

எனக்குப் பல வருடமாக திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை. காரணம், நான் சினிமாக்காரன். அதோடு எங்க அப்பாவுக்கு வந்திருந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய டாக்டருங்க இருந்திருந்தா என் அப்பாவைக் குணப்படுத்தியிருக்க முடியும்.

அதனால, கல்யாணம் பண்ணா டாக்டர் பொண்ணைத் தான் பண்ணனும்னு மனசுல ஒரு வைராக்கியம்.

அந்த ஏக்கம்தான், என் கல்யாணத்தை தாமதப்படுத்தியது.

நான் முதலில் சங்கீதாவை பொண்ணுப் பார்க்கப் போகவில்லை. என் அம்மாவும் தங்கையும் பார்த்துட்டு வந்து, ”வந்தா இந்தப் பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு” சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம் தான் நான் இவங்களைப் பார்க்கப் போனேன் என கூறுகிறார்.

சங்கீதா கூறுகையில், எங்க வீட்லயும் இவரை தான் நான் மணக்கனும் என பிடிவாதமா இருந்தாங்க.

எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அதேமாதிரி, என் நண்பர்கள் எல்லாம் அவர் படிக்காதவர், சினிமாக்காரர் என்பதால் வேண்டாம் என சொன்னார்கள்.

எனக்குக் குழப்பம். இவரு பொண்ணு பார்த்துட்டுப் போனபிறகு, அன்னைக்கு சாயங்காலம் எனக்குப் போன் பண்ணாரு. சின்ன வயசுல இருந்து இப்போவரை, தான் செய்த நல்லது, கெட்டதுனு எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னாரு.

இவரு அப்படிப் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சுப்போயிடுச்சு, பின்னர் திருமணத்துக்கு சம்மதித்தேன் என்கிறார் சங்கீதா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்