குடிபோதையில் கொலை மிரட்டல்! நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் அளித்த நித்யா

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி இப்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவும், பாலாஜியும் கலந்து கொண்டனர்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டதை வைத்து ஒன்றாக சேர்ந்துவிடுவாரகள் என்று எதிர்பார்த்த போது, நித்யா இங்கு எப்படி 100 நாட்கள் இருக்க வேண்டுமோ, அதே போன்று வெளியில் வந்து 100 நாட்கள் நல்ல படியாக வாழ்ந்து காட்டினால் யோசிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இப்போது 100 நாட்களை தாண்டி சென்ற நிலையில், நித்யா கணவர் மீது மீண்டும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எங்களது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதால், குடிபோதையில் கொலை மிரட்டல் விடுக்கும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, பாலாஜி தான் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து, விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers