அரசியலுக்கு என்னை அனுப்பியவரே அவர் தான்: இளையராஜா விழாவில் கமல்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

தன்னை அரசியலுக்குப் போகச் சொன்ன முதல் நபர் இளையராஜாதான் என இளையராஜா 75 விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில்,

இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். மறைந்த எனது அண்ணன் சந்திரஹாசன், அரசியலே வேண்டாம், போய்விடாதே என்றார்.

ஆனால், என்னை அரசியலுக்குப் போங்க போங்க என்று முதலில் சொன்னவர் இளையராஜாதான் என்றார்.

உடனே குறுக்கிட்ட இளையராஜா, உங்களை எப்போ சொன்னேன். அப்ப சொன்னப்ப ஏன் போகலை. எவ்ளோ தாமதமா அரசியலுக்கு வந்திருக்கீங்க என்றார்.

தொடர்ந்து இளையராஜாவுடன் தாம் பணியாற்றியதையும் பாடல் பாடியபோது ஏற்பட்ட நிகழ்வுகளையும் கமல் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்