ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இசைஞானி இளையராஜாவின் காலில் விழுந்த மத்திய அமைச்சர்! ஏன் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக

இளையராஜா - 75 என்று தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

கடந்த 2 மற்றும் 3-ஆம் திகதி என இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த விழாவின் திரைப்பிரபலங்கள் பலரும் அவரின் திரையுலக பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அற்புதமாக விளக்கம் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பழம்பெரும் நடிகர் சிவகுமார், இளையராஜாவிற்கு தங்க மோதிரம் ஒன்றையும் அணிவித்தார். அதன் பின் ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியது.

இந்நிலையில் 3-ஆம் திகதி(நேற்று ) இளைய ராஜா இசையில் பல படங்களில் நடித்தவர்களுமான ரஜினி, கமல், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

இளையராஜாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென்று அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு மத்திய அமைச்சர் அவர் காலில் விழுந்ததை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

இளையராஜாவின் காலில் விழுந்தது ஒரு ரசிகனாக அவருக்கு மரியாதை செலுத்தியது என பெருமையாக உள்ளது என்று கூறினார்.

மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இளையாராஜா காலில் விழுவது மட்டுமில்லாமல், அவருடைய ஒவ்வொரு பிறந்தாளுக்கும் சென்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்