40 வயதிற்கு பின்பு தான் அதன் மீது ஆசை அதிகமாகிறது! பிரபல நடிகை வித்யாபாலன் சொன்ன காரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான வித்யாபாலன் 40 வயதிற்கு பின்பு தான் உறவின் மீது ஈர்ப்பு அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளார்.

ஹிந்தி திரையுலகின் நம்பர் ஒன் நடிகையான வித்யாபாலன், கவர்ச்சியாக நடிப்பதில் தாராளம் காட்டி வருகிறார். தமிழை தாய் மொழியாக கொண்டாலும், இவர் முழு நேர மும்பை வாசி தான், இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது உறவினர்களுடன் 40-வது பிறந்த நாள் கொண்டாடினார்.

அப்போது அவரிடம், 40 வயதை கடந்த காரணத்தினால் வயதானதாக உணர்கிறிர்களா என்று கேட்ட போது, தற்போது தான் நான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கருதுகிறேன்.

இப்போது தான் நான் மிகவும் சேட்டைகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். சொல்லப்போனால் உறவில்(செக்ஸ்) புதிது புதிதாக இப்போது தான் ஆசைகள் வர ஆரம்பித்துள்ளன. எனக்கு மட்டுமல்ல இது பெரும்பாலான பெண்களுக்கும் பொருந்தும்.

எனக்கு 20 வயது ஆகும்போது எனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். 30 வயதில் அந்த கனவை நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தேன்.

தற்போது கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். 40 வயதைக் கடந்த நிலையில் மிகவும் இளமையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் நான் என்னை உணர்கிறேன்.

40 வயது ஆகிவிட்டால் பெண்கள் உறவில் ஆர்வமாக இருப்பதில்லை என்பது எல்லாம் கட்டுக்கதை என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்