ஒரு வாரத்தில் எனக்கு திருமணம்: நகை, பட்டுபுடவையுடன் ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட அழகான புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

ஒரு வாரத்தில் தனக்கு திருமணம் என கூறி நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவருடன் செளந்தர்யாவுக்கு காதல் ஏற்பட்டது.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் வரும் 11-ஆம் திகதி விசாகன் - செளந்தர்யா திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறவுள்ளது.

திருமணம் நடக்கவுள்ளதையடுத்து செளந்தர்யா உற்சாகமாக காணப்படுகிறார்.

இதையடுத்து பட்டு புடவை மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை கழுத்தில் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஒரு வாரத்தில் திருமணம்! மணமகள் தருணம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers