மேடையில் வைத்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் கோபப்பட்ட இளையராஜா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் இளையராஜா பாடிய சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.

மெளனராகம் படத்தில் இசையமைத்த ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார் இளையராஜா. உடனே ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடலுக்கான இசையை கீபோர்டில் வாசித்தார்.

மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் கரவொலி எழுப்பி, உற்சாகமானார்கள். அப்போது இளையராஜா பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே’ என்று செல்லமாக அட்வைஸ் செய்ய, கீபோர்டை விட்டு, தெறித்து நகர்ந்து சிரித்து மகிழ்ந்தார் ரஹ்மான்.

இதைப் பார்த்து, ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகக் குரல் கொடுத்தார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers