தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை மணக்கிறாரா நடிகர் ஆர்யா? வெளியான புதிய தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் என்ற செய்தி வதந்தி என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அபர்ணதி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவிற்கு மணப்பெண் தேடுவதற்காக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை அமைதியாக இருந்த ஆர்யா, கடைசி வரை யாரையும் தேர்வு செய்யவில்லை.

இதனிடையில் 38 வயதான ஆர்யா, 21 வயது நடிகையான சாயிஷாவுடன் காதல் வயப்பட்டதாவும் இருவருக்கும் வரும் மார்ச் மாதம் 10ம் திகதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

இது தொடர்பாக ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உண்மை என்றோ மறுப்பு தெரிவித்தோ அறிக்கை வெளியிடவில்லை.

இதனால் இந்தச் செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அபர்ணதி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஆர்யா-சாயிஷா திருமணம் தொடர்பாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் விஷாலைப் போல் ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ இத்தகவலை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டால் மட்டுமே இதனை உண்மையென நம்ப முடியும். மற்றபடி இது 99 சதவீதம் பொய்யான தகவல் என அவர் கூறியுள்ளார்.

அபர்ணதியின் இந்தப் பேட்டியால் மீண்டும் ஆர்யாவின் திருமணம் பற்றி குழப்பம் அதிகமாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்