விருப்பமில்லாமல் அவளை மணந்தேன்... முடிவுக்கு வரும் பிரபல நடிகரின் 7 ஆண்டு திருமண வாழ்க்கை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சந்தீப் ஆனந்த் தனது மனைவியை ஒரு வருடமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற ஆனந்துக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக மனைவியை பிரிந்து வாழும் ஆனந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு விருப்பமில்லாமல் தான் என் திருமணம் நடந்தது, என் பெற்றோர் மகிழ்ச்சிக்காக தான் திருமணம் செய்து கொண்டேன்.

என் மனைவி சிறிய ஊரை சேர்ந்தவர், நான் மும்பையை சேர்ந்தவன்.

இருவரின் மனநிலையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றாக இருக்கவில்லை, என்றாவது ஒருநாள் மனதால் இணைவோம் என நம்பினேன், ஆனால் அது நடக்கவில்லை.

அதனால் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்துவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்