முகேஷ் அம்பானியின் 2வது மகனின் காதலி யார் தெரியுமா? புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானியின் காதலி ராதிகா, இஷா அம்பானி திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் அவரின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ராதிகா மெர்சண்ட் என்ற பெண்ணின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ராதிகா வேறு யாரும் இல்லை, முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானியின் காதலி தான்.

இருவரும் காதலிப்பதாக வெளியில் உறுதியாக சொல்லவில்லை, ஆனாலும் அவர்கள் வெளியில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் நிறைய வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அம்பானி வீட்டின் அடுத்த திருமணம் குறித்த அறிவிப்பை முகேஷ் வெளியிடுவாரா என பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்

இந்நிலையில் இஷா அம்பானி திருமணத்தில் ராதிகா கலந்து கொண்டார்.

அப்போது அவர் தேவதையாக பச்சை நிற ஆடையில் ஜொலித்த புகைப்படங்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது.

பிரபல ஆடை வடிமைப்பாளர் சப்யசச்சி முகர்ஜி இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers