ஸ்ரீதேவி பங்களாவில் நிறைந்திருக்கும் ரகசியம்! இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Abisha in பொழுதுபோக்கு

ஸ்ரீதேவி பங்களா திரைப்படத்தில் நிறை ரகசியங்கள் உள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் பிராந்த் மாம்புலி தெரிவித்துள்ளார்

ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தை இயக்குநர் பிராந்த் மாம்புலி இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது குளியல் தொட்டியில் இறந்து கிடப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

இதனை அடுத்து அந்த படத்தில் நடித்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கும், இயக்குநர் பிராந்த் மாம்புலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூர் சட்டபடி நோட்டீஸ அனுப்பினார்.

இது குறித்து இயங்குநர் அளித்த பேட்டியில் ஒரு நடிகையின் வாழ்கை குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும். கங்கனாவை நடிக்க வைப்பதே திட்டம் ஆனால் அவர் மற்ற படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றும், கூறினார்.

மேலும் இந்த படம் குறித்து அவர் தெரிவிக்கையில், லண்டன் செல்லும் ஓரு நடிகையின் வாழ்க்கை குறித்தே இந்த படம் அமைந்துள்ளது என்றும், தொடர்ந்து இந்த படத்தில் நிறை ரகசியங்கள் உள்ளன.

நடிகை ஸ்ரீதேவியின் ரசிகர்கள் படத்தை பார்த்து இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமா என்று முடிவு செய்யட்டும் என்றும், அவர் ஸ்ரீதேவியை மிகவும் மத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers