செல்போன் தட்டிவிட்டு நடிகர் சிவக்குமாரின் இமேஜ் போச்சு: இயக்குநர் மறைமுக சாடல்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சென்னையில் பபாசி நடத்தும் சென்னை புத்தக கண்காட்சி விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், நடிகர் சிவகுமார் இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டதை மறைமுகமாக சாடியுள்ளார்.

பழனியப்பன் கூறியதாவது, நான் தலைகீழாக கம்பராமாயணம் பத்தாயிரம் பாட்டு எப்படி சொல்வேன் தெரியுமா, அப்படி சொல்வதில் ஒரு பெருமையையும் இல்லை.

சிலர் பத்தாயிரம் பாட்டினை மனப்பாடும் செய்து என்ன செய்வார்கள், ஒரு செல்போனை தட்டிவிட்டு உங்களுடைய மொத்த இமேஜையும் கெடுத்துக்கொள்வீரகள்.

நாற்பத்தைந்து ஆண்டுகாலமாக சேர்த்துவைத்த இமேஜ், ஒரு செல்போனை தட்டிவிட்டதால் போய்விட்டதே. பத்தாயிரம் பாட்டு மனப்பாடம் செய்து என்ன பயன், மனம் விசாலப்படாமல் நீங்கள் படித்து என்ன பயன் என்று பேசியிருந்தார்.

நடிகர் சிவக்குமார் நடிகர் என்பதை தாண்டி, நல்ல ஒரு ஓவியர் மற்றும் கம்பராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாச கதைகளை பற்றி பலமணி நேரம் மேடைகளில் பேசும் பேச்சாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், நடிகர் சிவக்குமார் மதுரையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது, அவரிடம் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி செல்ஃபீ எடுக்க முயற்சி செய்ய, அவரது மொபைலை சிவக்குமார் தட்டிவிட்டது பெரும் சர்ச்சையானது.

அந்த சம்பவத்தையும், நடிகர் சிவக்குமார் கம்பராமாயணம் பேசுவதையும் இணைத்து விமர்சித்துள்ளார் பழனியப்பன்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers