புகைப்படம் தவறு: விஷால் அதிரடி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்து விஷால் தரப்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விஷாலின் மணமகள் என்று வெளிவந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.

முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers