கமல் கட்சியில் சேர ஆசை: விருப்பம் தெரிவித்த பிரபல நடிகை ஷகீலா

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆசைப்படுவதாக பிரபல தென்னிந்திய நடிகையான ஷகீலா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு ஆளுமைகள் இருந்த காலகட்டத்தில் விஜயகாந்தை தவிர்த்து முன்னணி நடிகர்கள் பலரும் வாய்மொடி மௌனியாகவே இருந்து வந்தனர்.

ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் பெரிய வெற்றிடத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தற்போது ஓய்வு பெரும் வயதில் உள்ள நடிகர்கள் முதற்கொண்டு பலரும் புதிதாக கட்சியினை துவங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை துவக்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முனைப்பிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ள நடிகை ஷகீலா, தனக்கு கமல்ஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், அவருடைய கட்சியில் சேர ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்