வீட்டு வேலைக்கார பெண்ணின் மகனை ரஜினி எப்படி பார்த்துகொண்டார் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான ரஜினி எந்த ஒரு விளம்பரமுமின்றி பலருக்கும் உதவி செய்து வருகிறார், அந்த வகையில் அவர் செய்த உதவி குறித்து டிசைனர் மதி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது அரசியலிலும் சிறிது கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் அரசியலில் வருவேன் என்று கூறுகிறாரே தவிர, அதைப் பற்றி வேறு எதுவும் வாய் திறக்க மறுக்கிறார்.

இப்படி ஒரு புறம் இருந்தாலும், திரைத்துறையில் இருக்கும் பலர் மற்றவர்களுக்கு தெரியாமல் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியும் பலருக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில் உதவி பெற்ற ஒருவர்தான் போஸ்டர் டிசைனர் மதி.

இவர் பேனர் மற்றும் போஸ்டர் டிசைன் தொழில் செய்து வருகிறார். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெரும்பாலானோர் இவரிடம் தான் பேனர் மற்றும் போஸ்டர் டிசைனிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரிடம் ரஜினி செய்த உதவி குறித்து கேட்ட போது, என்னுடைய குடும்பம் மிகவும் ஏழை குடும்பம். எனது அம்மா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது ரஜினி தான் என்னுடைய படிப்பிற்கு உதவினார். தாத்தா குப்புசாமி துப்புரவு தொழில் செய்து வந்தார். அவர் அடிக்கடி போயஸ்கார்டன் பகுதியில்தான் வேலை பார்ப்பார்.

அவ்வபோது ரஜினி சார் வீட்டிலும் வேலை பார்ப்பார். அப்போது ரஜினி சார் பேப்பர் படித்துக்கொண்டே என் தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று ரஜினி சாரை குடும்பத்துடன் சந்திப்போம். அவர் எங்களுக்கு இனிப்பு மற்றும் புது ஆடைகள் வாங்கி கொடுப்பார். தாத்தா மூலம் தான் எனது அம்மா ரஜினி வீட்டிற்கு வேலைக்கு சென்றார்

ரஜினிக்கு யாரும் காலில் விழுவது பிடிக்காது. ஒருமுறை தாத்தாவை அடையார் வீட்டிற்கு வர சொன்னார். அப்போது நானும் தாத்தாவும் சென்றோம்.

அங்கு தான் ரசிகர்கள் பலர் அவரின் காலில் விழும் போது எச்சரித்ததைக் கண்டேன். அந்த கூட்டத்திலும் அவர் எங்களை பார்த்தவுடன் அழைத்தார்.

உங்களுக்கு இனிப்பு கொடுத்து, பார்த்து பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று எங்களிடம் அன்பாக பேசினார்.

ரஜினி செய்த உதவிகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் நல்லா படிச்சி இந்த நிலைக்கு வர ரஜினி தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்