நான் வெளியே வந்தால் மக்கள் அப்படி சொல்லுவாங்க..நடுரோட்டில் அழுதேன்: பிரபல நடிகை நெகிழ்ச்சி

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்திருப்பவர் தான் நடிகை லட்சுமி.

இதற்கு முன்னர் இவர் ஊர்வம்பு என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாத போது, செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில் அவரிடம் உங்களுக்கு மறக்க முடியாது நிகழ்வு எது என்று கேட்கப்பட்டது.

அப்போது அவர் ஜீ தமிழ் விருதுகள் நிகழ்ச்சி நடந்த போது, அதில் என்னுடைய பெயரும் நாமினேஷனில் இருந்தது.

இதனால் விருது நிகழ்ச்சிக்கு முன்பு நான் வெளியில் சென்றால், அங்கு பார்க்கும் மக்கள் உங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும், என்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அப்படி ஒருமுறை விருது கிடைக்கும் என்று பலர் கூறிய போது, நடுரோட்டில் நின்று அழுதுவிட்டேன், இறுதியாக மக்கள் சொன்ன படி எனக்கு விருதும் கிடைத்தது, பெருமையாக இருந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers