அரிவாளோடு கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள்! நீண்ட நாட்களுக்கு பின் கைது

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் சர்கார் பட விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் எனக் கூறி இரண்டு பேர் கொலை மிரட்டல் விடும் வகையில் வீடியோ வெளியிட்டதால், தற்போது அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் தான் சர்க்கார். இப்படத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று இருப்பதாக கூறி, அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி விஜய் பேனர்களை கிழித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்களை தூக்கி எறிந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு பேர் விஜய் ரசிகர்கள் எனக் கூறி அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் வாட்ஸ் அப், யூடியூப்பில் மிரட்டல் வீடியோவை வெளியிட்ட சஞ்சய், அனிஷேக் ஆகிய 2 பேர் மத்திய குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்