உண்மையில் என்ன நடந்தது? சினிமா வாய்ப்பு தருவதாக பல பெண்களை சீரழித்த மோகன் கதறல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீர்ழித்ததாக கூறப்படும் மோகன், தான் தலைமறைவாக வாழ வேண்டிய அவசியமில்லை, எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக கேஸ்டிங் மோகன் தொடர்பான வீடியோ ஒன்று திரையுலகினர் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் துணை நடிகை மித்ரா என்பவர் பகீர்ந்தார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் குறித்து மோகன் பிரபல தமிழ் நாளிதல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ஒரு வீடியோவால் என் வாழ்க்கையில் ஏதோதோ நடந்துவிட்டது. மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். கண்ணியமான பதவியில் இருந்தவன்.

நான் 14 ஆண்டுகளாக மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலை பார்த்தவன். அங்கு 400 பேர் கொண்ட பணியாளர் குழுவுக்கு தலைமை ஏற்று நடத்தினேன்.

அப்படி இருக்கும் போது நான் ஏன் இந்த மாதிரி நடந்துகொள்ள போகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை படம் பிடித்து வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர். இதனால் எனது குடும்பத்தை இழந்து தவிக்கிறேன். அப்பா மட்டும் தான் என்னுடன் இருக்கிறார்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் யாரையும் மிரட்டவும் இல்லை, கட்டாயப்படுத்தவும் இல்லை. அப்படி இருக்கும் போது நான் ஏன் ஓடி ஒளிந்து தலைமறையாக இருக்க வேண்டும்.

என்னுடைய போனை கூட ஆப் செய்யவில்லை. இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இவர் என் மீது தவறு இல்லை என்று கூறினாலும், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்