அன்று அப்பா என கதறி அழுத சுஜா: ஆசையை நிறைவேற்றி பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் புகழ் சுஜா, சிவகுமார் திருமணம் கடந்த நவம்பர் மாதம் இனிதே நடைபெற்றது.

திருமணத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் பலரும் வந்து கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.

இந்த திருமணத்துக்கு சுஜாவின் அப்பா சார்பாக நான் வருவேன் என கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு காரணமாக அவரால் வரமுடியவில்லை.

இதையடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுஜாவையும் சிவகுமாரையும் தம்பதி சமேதராக அழைத்து, அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து வாழ்த்தினார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, ‘என் அப்பாவை அழைத்து அவருக்கு சாப்பாடு போடணும். அதான் என் ஆசை. அது நிறைவேறுமா தெரியலை’ என்று சொல்லிவிட்டு சுஜா அழுதது நினைவிருக்கலாம்.

அப்போது கமல், பாருங்க… வரலேன்னா, அப்பா ஸ்தானத்துல நான் வரேன், சாப்பிடுறதுக்கு’ என்று கூறினார்.

இப்போது சுஜா தம்பதியை அழைத்து கமல் விருந்து வழங்கியதில் இன்னும் நெக்குருகிப் போனார் சுஜா.

மேலும், கமல் அப்பாவுக்கு நன்றி. ஸ்ரீப்ரியா அத்தைக்கும் நன்றிகள். விரைவில் கமல் அப்பா எங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறில்லை என்று நெகிழ்ந்து போனார் சுஜா.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்