அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலில் இத்தனை தமிழர்களா... முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் 2018ஆம் ஆண்டின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான்கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி உள்ளார். அவரின் வருமானம் ரூ.228.09 கோடி ஆகும்.

மூன்றாம் இடத்தில் உள்ள 2.0 திரைப்பட புகழ் அக்‌ஷய்குமாரின் வருமானம் ரூ.185 கோடியாக உள்ளது.

இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே ரூ.112.8 கோடியுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

தீபிகாவை தொடர்ந்து டோனி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன் (ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர்.

சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்