31 வயது பெண்ணை கரம்பிடித்த நடிகர் ஜாக்கிசானின் 19 வயது மகள்: அதிர்ச்சியில் பிரபலங்கள்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 19 வயது மகள் 31 வயது பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்த ஜாக்கிசான், 1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லெய்ன் நக் என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் எட்டா நக் என்னும் குழந்தை பிறந்தது.

கன்னடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன் என்ற 31 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த 19 வயது எட்டா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டாதாக கூறி, கனடா நாட்டில் பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும், திருமணத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து, அட்டுன் நடத்தி வந்த ஊடக சார்பு நிறுவனத்தை திறம்பட நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய மகள் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்பதை அறிந்து ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜாக்கிசான் மற்றும் அவருடைய மனைவி, தற்போது மேலும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers