பிரபல திரைப்பட நடிகை காலமானார்: கண்ணீரில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல மூத்த திரைப்பட நடிகை லலன் சராங் தனது 79-வது வயதில் காலமானார்.

ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் லலன் சராங்.

இவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கமலாகரை திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளான்.

நடிகையாக மட்டுமின்றி எழுத்தாளராக திகழ்ந்த சராங் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சராங் கடந்த வாரம் மும்பையில் உள்ள ஜோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் அவரின் உயிர் நேற்று முன் தினம் பிரிந்தது.

சராங்கின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்