சினிமாவில் இரண்டு பெண்களுடன் டேட்டிங்.. Metooல் என் பெயர் வந்துவிடுமோ? நடிகர் விஷால்

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகரான விஷால் மீ டூ குறித்து கூறும் போது, கண் விழிக்கும் போது எங்கு என்னுடைய பெயரை கேட்க வேண்டி வருமா என்ற பயத்துடன் இருந்ததாக கூறியுள்ளார்.

திரையுலகில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது தான் மீடூ, ஏனெனில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பின்னர் பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை மீடூ மூலம் சமூகவலைதளங்களில் பகீர்ந்தனர்.

அதில் நம்ப முடியாத சில பிரபலங்களும் இருந்தனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகாரன விஷால் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தமிழ் சினிமாவோ, தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னட சினிமாவோ, பணியிடத்தில் நடிகைகளின் பாதுகாப்பும் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் பாலியல் வற்புறுத்தல்களுக்குப் பலியாகக் கூடாது. ஆசைக்கு இணங்காவிட்டால் வாய்ப்புகள் பறிபோய் விடும் என்ற பயம் நடிகைகளுக்கு நீங்க வேண்டும்.

திரையுலகில் பாலியல் சுரண்டல்கள் அதிகம் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாத் துறைகளும் ஒன்றிணைந்து பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சமீபத்தில் தன்னுடைய நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தி சுரேசும், வரலட்சுமியும் நடித்திருந்தனர். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

என்னுடைய படங்களில் நடிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். அதே பாதுகாப்பை நாடு முழுவதும் உள்ள திரைத் துறையினர் அளிக்க வேண்டும்.

மீடூ இயக்கம் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் மிருகங்களை வெளிக்கொண்டு வரும் விதமாகத்தான் தொடங்கியது.

ஆனால் அது எங்கோ ஓர் இடத்தில் தங்களுடைய சுய லாபத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மறுத்தற்காக, ஒரு படம் குறித்து வாக்கு கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாததற்காக, மற்றும் பிற காரணங்களுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மீடூ பயன்படுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது எங்கு என்னுடைய பெயரைக் கேட்க வேண்டிவருமா என்ற பயத்துடன் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இந்த அவநம்பிக்கை, பயம், சந்தேகம் ஆகிய சூழல் நீக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்களின் பெயர்களைக் களங்கப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் திரைத்துறையில் நான் இரண்டு பெண்களுடன் டேட்டிங் செய்திருக்கிறேன். அதற்காக அவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று அர்த்தம் ஆகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers