பிரபல மூத்த திரைப்பட நடிகை மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல மலையாள திரைப்பட நடிகையும், டப்பிங் ஆர்டிஸ்டுமான லட்சுமி கிருஷ்ண மூர்த்தி இன்று வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

கேரளாவின் கோழிக்கூடு பகுதியை பூர்விகமாகக் கொண்ட லட்சுமி கிருஷ்ண மூர்த்திக்கு வயது 90. கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சந்தியா என்ற மகளும் அருண் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சென்னையில் இன்று வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. 1990-ஆம் ஆண்டுகளில் மலையாள படங்களில் நடித்துள்ள இவர், டப்பிங்கும் செய்துள்ளார்.

தமிழில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் இறப்பு செய்தியைக் கேட்ட திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்