பாக்யராஜை மிரட்டிய கார்ப்பரேட் கிரிமினல்: சர்காரை மிஞ்சிய திகில் கதை

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

சர்கார் கதை திருட்டு தொடர்பாக நீதிமன்றம் வரை சென்று போராடிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

குறித்த ராஜினாமாவை ஏற்க சங்க நிர்வாகிகள் மறுத்துள்ள நிலையில், பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தின் மிரட்டலால் அவர், ராஜினாமா முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது

இயக்குனர் முருகதாஸின் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்று என்று பாக்யராஜ் நீதிமன்றத்திற்கு சான்றளித்ததால், இயக்குனர் ஏ.ஆர் .முருகதாஸ், வருண் ராஜேந்திரனுடன் சமரசமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சர்கார் கதை தன்னுடையது என்றாலும் அதனை 10 வருடத்துக்கு முன்பே சிந்தித்து எழுதி வைத்திருந்த வருண் ராஜேந்திரனுக்கு சர்கார் படத்தில் 30 நொடிகள் நன்றி அறிவிப்பு கார்டு போடுவதாக ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டார்.

ஏ.ஆர். முருகாதாசுக்கு கதை திருட்டு பட்டம் கிடைத்ததோடு கதை என்ன என்பது வெளியாகவும் இயக்குனர் பாக்யராஜ் தான் காரணம் என்று சர்காருக்காக கோடிகளை கொட்டி கொடுத்த கார்பரேட் நிறுவனம் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகின்றது.

படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட பாக்யராஜுக்கு தங்களது வல்லமையை காட்ட பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக வருங்காலத்தில் பாகியராஜ், அவரது மகன் சாந்தனு, மனைவி பூர்ணிமா உள்ளிட்டோர் சிறு வேடத்தில் நடித்தாலும் அந்த படங்களை தங்களது நிறுவனம் வாங்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனங்களும் இவர்களை வைத்து படம் தயாரிக்க கூடாது என்றும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சர்கார் படத்தின் கதையை வெளியில் சொன்ன குற்றத்திற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பாக்யராஜை போட்டியின்றி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தெரிவு செய்த நிர்வாகிகளில் சிலரும்,

பாக்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்யும் சூழ் நிலைக்கு அவர் தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் சில அசௌகரியங்களை சந்தித்ததாக பாக்யராஜ் கூறி இருந்தாலும்,

அவருக்கு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்த கார்ப்பரேட் நபர்கள் யார் என்பதை சொல்ல மறுத்துள்ளார்.

அதே நேரத்தில் தன்னை போல மற்ற நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்ய தேவை இல்லை என்று கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளை நாசுக்காக கோடிட்டு காட்டியுள்ளார்.

இதற்கிடையே பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், உதவி இயக்குனர்கள் மத்தியிலும் ஆதரவு எழுந்தது.

இதனால் விழித்துக் கொண்ட தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க பொது செயலாளர் மனோஜ்குமார், தாங்கள் பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று அறிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஆளும் சர்காரை விமர்சிப்பதில் தான் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி என்றால்,

சர்கார் என்று வட மொழியில் பெயர் சூட்டப்பட்ட இந்த படத்தை சுற்றியும் புது புது சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்