பிரபல நடிகையை பின் தொடர்ந்து மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஓட்டுனர்: என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான வசுந்தரதாஸ் தன்னை பின் தொடர்ந்து வந்த ஓட்டுனர் ஒருவர் மிகவும் மோசமாக திட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவில் சிக்னல் ஒன்றில் விதியை மீறி வேறு சாலைக்குச் செல்ல முயன்ற மற்றொரு காருக்கு நடிகை வசுந்தரா தாசின் கார் இடைஞ்சலாக நின்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஓட்டுனர் வசுந்தராவை தரக்குறைவாக திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அவரை சுமார் 4 கிலோ மீற்றர் வரை பின் தொடர்ந்து, காரை விட்டு இறங்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து வசுந்தரா அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அப்போது அவர் அந்த ஓட்டுனர் தன்னிடம் மிகவும் மோசகாம நடந்து கொண்டதாகவும், காரை விட்டு இறங்கும் படி வற்புறுத்தியதாகவும், ஆனால் நான் பதற்றம் காரணமாக இறங்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், வசுந்தரா, KA-05 AE-3933 என்ற அந்தக் காரின் பதிவு எண்ணையும் பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.இருப்பினும் அந்தக் காரின் உரிமையாளர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்